மனிதன் உயிர் வாழ உணவு இன்றியமையாது ஆகும் .உடலை இயக்கும் சக்தி உணவில் இருந்தே தயாரிக்கபடுகிறது என்று நம் முன்னோர்கள் கூறிகிறார்கள்
உண்ணும் உணவு சரியானதாக இருந்தால் உடலின் இயக்கமும் ,வளர்ச்சியும் சரியானதாக இருக்கும்
உண்ணும் உணவில் குறைபாடுகள் இருந்தால் அல்லது உணவு முறை தவறாக இருந்தால் அது உடலிலும் உயிர் சக்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் நொடிகள் உருவாக முக்கிய காரணமாக அமையும்
நமது உடலின் இயக்கங்கள் அனைத்துக்கும் சக்தி அவசியம் ஆகிறது தேவையான அளவு சக்தி கிடைத்தால் மட்டுமே நமது செல்கள் நலமாக வாழமுடியும் இந்த சக்தியை நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறமுடியும்
இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் பசிக்காக மட்டுமே ஒரே விதமான உணவை சாப்பிடுகிறோம் ஆனால் நம் முன்னோர்கள் மனிதனின் உடல் கூறுகளுக்கு ஏற்றவாறு உணவுகளை வலியுறுத்துகிறார்கள்
உணவின் தண்மை :
அணைத்து உணவுகளும் அமில தன்மை உள்ள உணவுகள் ,கார தன்மை உள்ள உணவுகள் என்று பிரிக்க படுகிறது
அறுசுவை அடிப்படையில் உணவு முறைகள் பிரிக்க படுகின்றன .ஒருஒரு சுவையும் ஒரு குறிப்பிட்ட உள்ளுறுப்புகளை வலுப்படுத்துகின்றன ,அல்லது பலப்படுத்துகின்றன .
உணவுகளை வாத தன்மை கொண்ட உணவுகள் ,பித்த தன்மை கொண்ட உணவுகள் ,கபம் தன்மை கொண்ட உணவுகள் என மூன்று வகையாக பிரிக்கலாம்
NEXT டுட்டோரியல்லில் அமில ,கார உணவுகளை பற்றி பார்ப்போம்
0 Comments